தேனி மாவட்டம் கூடலூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் “திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல்” என்ற தலைப்பில் நடைபெற்ற சுழலும் சொற்போரை, தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்,கம்பம் ந.இராமகிருட்டிணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டம் கூடலூரில் திராவிடர் கழகம் சார்பில் நேற்று மணியம்மையாரின் 105 -ஆவது பிறந்தநாள் விழா, தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க ஸ்டாலின் 72 -ஆவது பிறந்தநாள் விழா, பொதுக்குழு உறுப்பினர்
டி.பி.எஸ்.ஆர். ஜனார்த்தனம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திராவிட கழகத் தலைவர் வெ.தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் ப.செந்தில்குமார், தேனி மாவட்ட காப்பாளர் போடி ச. இரகுநாகநாதன், ப.க. செயலாளர் டி.பி.எஸ்.ஆர் அரிகரன், ஆகியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர திமுக செயலாளர் சி.லோகந்துரை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கரும்புச் சட்டை நடராசன் வரவேற்புரையாற்றினார்.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் என்ற தலைப்பில் சுழலும் சொற்போர் தொடங்கியது. தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ந.இராமகிருட்டிணன் சுழலும் சொற்போரை தொடங்கி வைத்து, தந்தை பெரியாரின் அருந்தொண்டினை, தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் உழைப்பினையும், ஒன்றிய பிஜேபி அரசின் சூழ்ச்சியினை விளக்கியும்
உரையாற்றினார்.

நடுவர் -முனைவர் க.அன்பழகன் திமுக ஆட்சியினை பாதுகாக்க வேண்டிய கடமையினை, பல்வகை சாதனைகளை எடுத்துக்காட்டி உரையாற்றினார். தொடர்ந்து, உரிமைபறிப்பு என்ற தலைப்பில் இரா.பெரியார்செல்வன்,இந்தி திணிப்பு என்ற தலைப்பில் இராம.அன்பழகன்,நிதி மறுப்பு என்ற தலைப்பில் ஆரூர்.தேவ.நர்மதா ஆகியோர் கருத்துக்களை பதிவு செய்தனர். கம்பம் நகர திராவிடர் கழகம் சார்பில் மனோகரன், மலைச்சாமி, தேனி மாவட்டக் கழகம் சார்பில் போடி நகரசெயலாளர் இர.பெரியார் லெனின்,தேனி மாவட்ட ப.க.தலைவர் பெரியகுளம் மோகன் ஏராளமான திராவிடர் கழகத்தினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர்முத்தமிழன் நன்றி கூறினார்.