
கன்னியாகுமரி மாவட்டத்தில
அரசு மதுபான கடைகளில் மதுபானம் வாங்க வருபவர்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று இருக்க வேண்டும். சான்று இருப்பவர்களுக்குஅரசு மதுபான கடைகளில் மதுபானம் வழங்க வேண்டும் என ஆட்சியர் அரவிந்த் அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார். சான்று இல்லாதவர்களுக்கு மதுபானம் வழங்க வேண்டாம் என்றும், மது பிரியர்களுக்கு மதுபானம் வழங்கினாள் டாஸ்மாக் ஊழியர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை மணியும் அடித்திருக்கிறார். ஆட்சியரின் இந்த உத்தரவால் மதுப் பிரியர்களும் டாஸ்மாக் ஊழியர்களும் ஆடிப் போய் இருக்கின்றனர்.
