• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வாக்களிப்பது நம் கடமை…இன்று தேசிய வாக்காளர் நாள் தினம்

ByA.Tamilselvan

Jan 25, 2023

வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) இன்று (ஜனவரி 25) அனுசரிக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி “தேசிய வாக்காளர் நாள்” ஆகும். வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகின்றது.
நமது வாக்காளர்களை அதிகாரமிக்கவர்களாகவும், விழிப்புணர்வு மிக்கவர்களாகவும், பாதுகாப்பு மற்றும் தகவல் அறிந்தவர்களாகவும் ஆக்குவதே இந்தாண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருளாகும்.