• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ByN.Ravi

Mar 14, 2024

மதுரை மாவட்டம், சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக
வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (13.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் பெண் பணியாளர்கள், 100 சதவீதம் தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘கும்மி ஆட்டம்’ மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பணி மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் ஃமதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 100 சதவிகிதம் தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி , பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ”செல்ஃபி போட்டோ பாயிண்ட்” மாரத்தான் போட்டி, கையெழுத்து இயக்கம் என பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் பெண்  பணியாளர்கள் ஒருங்கிணைப்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ,மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் 100 சதவீதம் தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடத்தின் நுழைவு வாயிலில்”
இடம்பெற்ற கண்கவர் வண்ணக் கோலம் அமைக்கப்பட்டது. மேலும், ”100 வாக்களிப்போம்” என மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மலர் கோலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ஃமதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பெண் பணியாளர்கள், 100 தேர்தல்
வாக்குப்பதிவை வலியுறுத்தி 'கும்மி ஆட்டம்' மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பணி மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, மதுரை வருவாய் கோட்டாட்சியர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ர.த.சாலினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.