• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முதலில் SMS-ஐ அறிமுகம் செய்தது வோடஃபோன்…தற்போது NFT வடிவில் வருகிறது

Byகாயத்ரி

Dec 18, 2021

வாட்ஸ் ஆப் மற்றும் இதர இண்டர்நெட் தகவல் பரிமாற்றங்களுக்கு முன்பு அனைவராலும் தகவல் பறிமாற்றங்களுக்காக உபயோகித்தது கைப்பேசி வழி குறுஞ்செய்திகளே (SMS).

அதிலும் ஒரு நாளைக்கு இவ்வளுவு தான் குறுஞ்செய்தி அனுப்ப முடியும் போன்ற தடைகளுக்கு மத்தியிலும் அனைவராலும் பகிரப்பட்ட குறுஞ்செய்தி அனுபவங்களை வார்த்தைகளால் சொல்ல இயலாது ஒன்று. அந்த அனுபவங்களை அதிகம் உணர்ந்தவர்கள் 90களில் பிறந்த 90’s கிட்ஸ்களே.கைப்பேசிகளில் முதன் முதலில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை உருவாக்கி வெளியிட்டது வோடஃபோன் நெட்வெர்க் நிறுவனமே.

29 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 3, 1992இல் வோடஃபோன் நிறுவனம் இங்கிலாந்தில் அதன் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்ற வாழ்த்துச் செய்தியை உருவாக்கி அனுப்பியது. இந்த குறுஞ்செய்தியைத்தான் வோடஃபோன் நெட்வொர்க் தற்போது NFT வடிவில் உருவாக்கி அதனை 2,00,000 அமெரிக்க டாலருக்கு விற்பனையும் செய்துள்ளது.