• Wed. Apr 24th, 2024

வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி

Byஜெ.துரை

Mar 12, 2023

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் திறன் வழிகாட்டும் திட்டத்தின் மூலமாக பயிற்சி முகாம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான ஞானசம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் டாக்டர் அசோக் குமார் முந்திரா, கல்லூரி முதல்வர் டாக்டர் சந்தோஷ் பாபு, கல்லூரி HOD டாக்டர் கார்த்திக், இன்பக்ட் ப்ரோ நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலாஜி ஜயர், இன்பக்ட் ப்ரோவின் கோர்ஸ் டைரக்டர் கௌரி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பட்டிமன்ற பேச்சாளரும் பேராசிரியருமான ஞானசம்பந்தம் வைஷ்ணவா கல்லூரியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தொழில் துறையினர் மூலம் நேரடியான பயிற்சி வழங்கப்படுகிறது.இந்த பயிற்சியின் மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது மிகப் பிரகாசமாக இருக்கிறது. மாணவர்கள் தொழில் நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெறுவதால் நிறுவனங்களுக்கு நேர்காணல் செல்லும் பொழுது அனைத்தையும் கற்றவர்களாக மாணவர்கள் இருக்கிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் கல்வி என்பதை தாண்டி வேலைவாய்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்று அதுமட்டுமின்றி மாணவர்கள் தொழில்களை உருவாக்குபவர்களாகவும் இருப்பதற்காக இந்த பயிற்சி மிக முக்கியமானதாக இருக்கிறது என தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அவர்களது வயதினை விட அதிக அளவிலான ஊதியம் தற்போது கிடைக்கின்றது என கூறினார்
அதனை தொடர்ந்து பேசிய கல்லூரி முதல்வர் தங்கள் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி தற்போது அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மாணவர்கள் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் போது நேர்காணலில் எளிதாக வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. தொழில் நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன அங்கு தேவையான தொழில் திறன்களை எங்கேயோ கற்றுத் தருவதால் அவர்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும். இந்த சிறப்பு பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *