ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு – ஊட்டி ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரியில் முப்பெரும் விழா – 2023 நடைபெற்றது.
ஊட்டி ஜே எஸ் எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என்ற முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் பி தனபால் வரவேற்புரையாற்றினார். முனைவர்கள் கே பி அருண் மற்றும் சத்திய நாராயணா ஆகியோர் கல்லூரியின் ஆண்டறிக்கையை வழங்கினார்.
மருந்தியல் துறை தலைவர் டாக்டர் கே கௌதமராஜன் கல்லூரி ஆண்டு மலரான பார்ம சாகா 30 வது தொகுப்பின் சிறப்புகளை பற்றி விளக்கினார். இந்த விழாவில் கல்லூரியின் ஆண்டு மலரான ‘பார்ம சாகா’ மென் நகல் மற்றும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. கேரளா மாநிலம் செருத்துத்தி யில் அமைந்துள்ள பஞ்சகர்மா தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டி சுதாகர் தலைமையில் விருந்தினராக கலந்துகொண்டர்.. அவர் தனது தலைமை உரையில் இதுபோன்ற விழாக்கள் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் தங்களுது எதிர்கால வாழ்வை எடுத்துகொள்ள கொள்ளவேண்டும் எனவும் தனது உரையில் விளக்கினார். விழாவில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட பி எஸ் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி பிருந்தா கல்லூரியில் ஆண்டு விழாக்கள் மற்றும் மாணவர்கள் வாழ்க்கையில் கல்லூரி ஆண்டு விழாக்கள் முக்கியத்துவத்தையும் பற்றியும் கல்லூரியின் தரத்தையும் பேசினார். ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை யின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் பி பரந்தாமன் கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்கள் செய்த மருத்துவ , மற்றும் மருந்து சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கை பற்றி எடுத்துரைத்தார். அபெக்ஸ் மருத்துவ நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பதவி வகிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர் டி ராஜ்குமார் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் மருந்தாக்கியல் மாணவர்களுக்கு மருந்து விற்பனை துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கினார். இந்த விழாவில் மைசூர் .எஸ்.எஸ்.மஹாவித்யாபீட மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர்.ஆர்.மகேஷ் தலைமை உரையாற்றினார்.
நிறைவாக மருந்து வேதியியல் துறையின் தலைவர் டாக்டர் ஆர். காளிராஜன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில்; கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறந்த விளங்கிய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுகும் பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினார்கள். இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது