• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தேசிய அளவில் முன்மாதிரியாக செயல்படும் வ.உ.சி துறைமுகம்

Byவிஷா

Jun 3, 2025

தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் புகழாரம் சூட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி) துறைமுகம், 2024-25 நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1 மில்லியன் சரக்கு கண்டெய்னர்களையும் (வுநுருள) கையாண்டு, தேசிய அளவில் முன்மாதிரியாகச் செயல்படுவதாக துறைமுக ஆணையம் பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்தத் துறைமுகம், தென் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த நிதியாண்டில் (2023-24) 41.72 மில்லியன் டன் சரக்குகளையும், 7,95,222 கண்டெய்னர்களையும் கையாண்டு, 0.77சதவீதம் மற்றும் 6.41சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த ஆண்டு, மேம்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் திறனை விரிவாக்கும் திட்டங்களால், இலக்கை எட்டுவதற்கு துறைமுகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வ.உ.சி துறைமுகம், கிழக்கு-மேற்கு சர்வதேச கடல் வழித்தடத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், இயற்கையாகவே மூலோபாய முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த ஆண்டு, டிசம்பர் 19, 2024 வரை 29.70 மில்லியன் டன் சரக்குகளையும், 5.62 லட்சம் கண்டெய்னர்களையும் கையாண்டு, முறையே 1.87சதவீதம் மற்றும் 6.74சதவீதம் வளர்ச்சியை அடைந்துள்ளது. புதிய கண்டெய்னர் முனையமான ‘தூத்துக்குடி சர்வதேச கண்டெய்னர் முனையம்’ செயல்பாட்டிற்கு வந்து, ஆண்டுக்கு 6 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் திறனை அளித்துள்ளது. மேலும், வடக்கு சரக்கு முனையம்-III (NCB-III) ஜனவரி 2025 முதல் இடைக்கால செயல்பாடுகளைத் தொடங்கி, 2026 டிசம்பருக்குள் 7 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக, வ.உ.சி துறைமுகம் பல உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 7,056 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிப்புற துறைமுகத் திட்டம், 4 மில்லியன் கண்டெய்னர்களை கையாளும் திறனுடன் இரண்டு புதிய கண்டெய்னர் முனையங்களை உருவாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2024-25 நிதியாண்டில் ரூ1,209.19 கோடி வருவாய் ஈட்டி, முந்தைய ஆண்டை விட 7.78சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், இந்த வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தேசிய அளவில் முன்மாதிரியாக அமைவதாகவும், வர்த்தகர்கள் மற்றும் தொழிற்துறையினரை இந்த வசதிகளை முழுமையாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.