• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

இரு தேவதைகளுக்கு நடுவில் விஜேஎஸ்!

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட் இன்று வெளியாகி உள்ளது. ரொமான்டிக் காமெடியாக உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திலிருந்து ரெண்டு காதல், டூடூடூ, நான் பிழை என இதுவரை 3 பாடல்கள் வெளியாகி உள்ளன.

இதில் மொலோடி பாடலாக உருவாகி உள்ள நான் பிழை பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அனிருத் இசையில், ரவி மற்றும் சாஷா திருப்பதி குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் படம் வெளியாகும் எனவும் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.