• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

”விவேக் சாலை” -விவேக் மனைவி கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்!

ByA.Tamilselvan

May 1, 2022

நடிகர் விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திந்து விவேக்கின் மனைவி அருட்செல்வி வேண்டுகோள் விடுத்த நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நடிகர் விவேக் என்றதும் நகைசுவை நடிகர் என்பதை தாண்டி அவரின் பல சமூக நலம் சார்ந்த செயல்பாடுகள் நினைவுக்கு வருகின்றன.சின்னகலைவாணர் – என அவரது ரசிகர்களால் அழைக்கபட்டார்.தனது சினிமா வசனங்களில் இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்தவர். சாதி.மதங்களுக்கு எதிராக சமூக மேம்பாட்டிற்கு உதவுகிற கருத்துக்களை தனது நகைசுவை காட்சிகளுக்கிடையே பரப்பி வந்தவர்.
இவற்றிக்கெல்லாம் மேலாக அப்துல்கலாமின் மரம் வளர்ப்புகனவை நனவாக்கியவர்.தனது மரணத்திற்கு முதல் நாளில் கூட தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக பேசிய அவர் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறை மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இந்த நிலையில் நடிகர் விவேக்கின் மனைவி அருட் செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் நடிகர் விவேக் இல்லம் அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.தமிழக அரசு நடிகர் விவேக்கின் மனைவி வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் திரைத்துறையினரும் விவேக்கின் ரசிகர்களும் இருந்தனர். இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இத்தகவல் திரைத்துறையினர்,விவேக் குடும்பத்தினர் மட்டுமல்லாது அவர்து ரசிகள்அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.