• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்..,

ByKalamegam Viswanathan

Feb 5, 2026

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ததமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டுக்காக தரிசனம் செய்ததாக தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நேற்று மாலை 5.45 மணிக்குதமிழக பாரதிய ஜனதா கட்சியின்முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வந்தார்.பின்னர் அவர் கோவிலின்கருவறைக்குச் சென்று திருமணக்கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி,தெய்வானை அம்பாள்,துர்க்கை அம்பாள்,கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5தெய்வங்களையும் பயபக்தியுடன் வழிப்பட்டார்.

இதனையடுத்துஉற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி தெய்வானையை வழிபட்டார். பக்தர்களுடன் செல்பி கோவிலுக்குள் ஒரு சிறுமி மற்றும் பக்தர்கள் பலர்விரும்பத்தின் பேரில் அவர்களுடன்செல்பி எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கோவில் வாசலில் பெண் மூதாட்டிகள் பலர் தங்களை பார்க்கவேண்டும். முகத்தை காட்டுங்கள் என்று சப்தமாககுரல் எழுப்பினர் உடனே அவர் குரல் வந்தபக்கமாக முகத்தை திருப்பி காட்டினார்.

மேலும் அவர் மூதாட்டிகள் நின்ற இடத்திற்கே சென்று கை கூப்பிவணக்கம் தெரிவித்தார். மேலும் அவர் சிலருக்குகை குலுக்கினார் .கோவிலுக்குள் ஒரு கடைக்காரர் அண்ணாமலைக்கு ஒரு முருகன் சிலை கொடுத்தார். அதற்கு அவர்சிலைக்கு உரிய பணத்தை கொடுத்து விட்டார். தமிழ்நாட்டுக்காக தரிசனம்
இந்த நிலையில் அண்ணாமலையிடம் கோவில் வாசல் முன்புதந்தைக்காக சுவாமி தரிசனமா?என்று நிருபர் கேட்டதற்கு “தமிழ்நாட்டுக்காக ” என்றார் இவர்முன்னதாக திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு சென்றுபா.ஜ.க. இளைஞரணிமாநிலத் துணைத் தலைவர் வெற்றிவேல் முருகன் திருமண நிகழ்ச்சியில்பங்கேற்றுமணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவரிடம் நிருபர்கள்பேட்டி கேட்டனர்.ஆனால் அவர் பேட்டி கொடுக்காமல் கோவிலுக்கு வந்து விட்டார். பா.ஜ.க. முன்னாள்மாநில தலைவர் அண்ணாமலைக்கு பா.ஜ.கராணுவ பிரிவுமாவட்டத் தலைவர் பழனிச்சாமி,திருப்பரங்குன்றம் பகுதி தலைவர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.