• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்: நாளை பேருந்தில் இலவச பயணம்

ByBala

Apr 18, 2024

தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் முதியவர், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களைவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் நாளை ஏப்-19ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தநிலையில் வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற Code ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.

இதனைதொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார்.