விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி விசாரணையை தொடங்கினார்.
விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்து மிரட்டி வந்துள்ளார். ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரது நண்பர்கள் அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், ஹரிஹரன் உட்பட 8 பேர் மீது அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஹரிஹரன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். நேற்று முன்தினம் சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என அறிவித்தார்.
இதைதொடர்ந்து, நேற்று விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி விசாரணையை தொடங்கினார்