• Fri. Jan 17th, 2025

பொய்வழக்கு போடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மனு!

Byகுமார்

Mar 15, 2022

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வரும் சாந்தி ஆனந்த் தம்பதியினர் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருவதை தடுத்து பாதுகாப்பு அளிக்கும் படி, மதுரையில் தென் மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் சின்னம்மா பேரவையில் மாநில அளவில் பொறுப்பு வகித்து வரும் சாந்தி என்பவர் குடும்பத்துடன் மனு அளித்து உள்ளனர்.

தொடர்ந்து மதுரை தென்மண்டல காவல்துறை அலுவலகம் முன் செய்தியாளர்களிடம் பேசிய சாந்தி கூறுகையில், ‘சின்னம்மா பேரவையில் மாநில பொறுப்புடன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வரும் என் மீதும் என் கணவர் மீதும் ராஜபாளையம் டிஎஸ்பி கண்ட்ரோலில் உள்ள காவல் நிலையத்தில் ஏற்கனவே பொய் வழக்குப் பதிந்து சுமார் 20 வருட காலமாக நீதிமன்றம் சென்று வருகிறோம்.

இச்சூழலில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஆகிய இருவரும் என் மீதும் என் கணவர் மீதும், என்னிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த அசோக்குமார் என்பவர் மூலம் பொய் புகார் கொடுக்க வற்புறுத்தி பொய் வழக்கு பதிவு செய்ய போவதாக மிரட்டி வருகின்றனர். எனது குழந்தைகள் பள்ளி,கல்லூரியில் பயின்று வரும் சூழலில் இது போன்று பொய்யான வழக்கு பதிவு செய்தால் குழந்தைகளை விட்டு பிரியும் சூழல் உருவாகிறது’ என்றார்!

மேலும் விருதுநகரைச் சேர்ந்த அசோக்குமார், மற்றும் சிங்கராஜ் ஆகியோர் தொடர்நது கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே காவல்துறை தென்மண்டல தலைவர் அவர்கள் மேற்படி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளித்துள்ளதாக கூறினார்.