• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வைரல்ஸ்டார் வனிதாவிஜயகுமாரின் புதுபிசினஸ்..!

Byவிஷா

Apr 23, 2022

தமிழ் சினிமாவில் தற்போது வைரல்ஸ்டாராக வலம் வரும் வனிதா விஜயகுமார் துணிக்கடையை தொடர்ந்து தனது அடுத்த பிசினஸை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
90 களில் ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்து விட்டு திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய நடிகை வனிதா விஜயகுமார் சமீப ஆண்டுகளாக அவ்வப்போது தொடர் சர்ச்சைகளில் சிகக்கி சர்ச்சை நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது திருமண வாழக்கையை முறித்துக்கொண்ட வனிதா, குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த வனிதா குக் வித் கோமாளி முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்றார்.
இதன் காரணமாக தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தனது பிஸினஸை கவனித்துக்கொண்டே படங்களிலும் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் வனிதா தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
தற்போது வனிதா அனல்காற்று, அந்தகன், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லு இருந்தா போராடு, பிக்கப் ட்ராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இதில் தொகுப்பாளர் கமல்ஹாசன் குறித்து இவர் வெளியிட்ட கருத்து வைரலாக பரவியது. நடிப்பு பிஸினஸ் மட்டுமல்லாமல் வனிதா தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இவரது சமூகவலைதள பக்கங்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், ஃபாலோவர்ஸ், சப்ஸ்கிரைபவர்ஸ் என பலரும் வனிதாவை ஃபாலோ செய்து வருகின்றனர். ஏற்கனவே துணிக்கடை நடத்தி வரும் வனிதா கடந்த ஆண்டு அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை தொடங்கினார். இது குறித்து தனது யூடியூப் வீடியோவில் பல டிப்ஸ்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில், தற்போது வனிதா புதிதாக பேஷன் டிசைனராக புதிள அவதாரம் எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில், வனிதா சிலருக்கு சிகை அலங்காரம் செய்துள்ளார். அப்போது அவர்களுடன் பேஷன் ஷோவில் நடப்பது போன்று உள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.