ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ17 லட்சம் வரை கொள்ளை அடித்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் கொண்டு அறுத்து கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஹோஷியாப்பூர் அருகே இரவு நேரத்தில் ஏடிஎம்க்குள் நுழையும் கொள்ளையர்கள் நவீன கேஸ் கட்டர் இயந்திரத்தைக் கொண்டு ஏடிஎம் மிஷினை அறுக்கிறார்கள்.பின்னர் சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைக்கப்படுகிறது. ரூ17 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.