• Thu. Mar 27th, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைகேற்பு கூட்டத்தில் புகார் மனு கொடுக்க வந்த பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட மக்களின் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைச்சார்ந்த மனுக்களை பெற்றார்.

இக்கூட்டத்தில் மனு கொடுக்க வந்த விழுப்புரம் வடக்கு தெரு, விராட்டிகுப்பம் பகுதியை சார்ந்த பாப்பாத்தி மகளும், கரூர் மாவட்டம், சைய்யதுஅப்பாஸ் மனைவி சாதிக்கா என்பவர் தனது சகோதரர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 20 பவுன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் பணத்தை வாங்கி, இதனால் வரை கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும், அதனால் உடனடியாக நகையையும் பணத்தையும் திரும்ப பெற்றுத் தர வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்க வந்தவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீ குளிக்க முண்ட முயன்றார், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு வீரர்கள் விரைந்து வந்து அவரை தடுத்து காப்பாற்றினார்.

மேலும் அவரிடம் பேச்சுவார்த்தைக் நடத்தி அவரை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர், இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.