• Sun. Mar 16th, 2025

ஈரோட்டில் திமுக கூட்டணிக்கு விழுப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் வாக்கு சேகரிப்பு

Byதரணி

Feb 3, 2023

ஈரோடு இடைத்தேர்தலில் .திமுக கூட்டணி வேட்பாளருக்காக விருதுநகர் மாவட்டம் விழுப்புனூர் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு.
ஈரோடு இடைத்தேர்தலில் .திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, ஓ.பி.எஸ் தரப்பில் முருகானந்தம் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கூட்டணி கட்சியினர் தனித்தனியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதேபோல தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் திமுக தொண்டர்கள் வாக்கு சேகரித்துவருகின்றனர். அதேபோல விருதுநகர் மாவட்டம் விழுப்பனூர் ஊராட்சிமன்ற தலைவர் எஸ் .தமிழ்செல்வன் தனது குழுவினரோடு ஈரோடுமாவட்டம் பெரியார் நகர் பகுதிகளில் வீடுவீடாக நோட்டீஸ் கொடுத்து மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.