ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது.அதற்கான வேட்புமனுவை திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தாக்கல் செய்தார்.
தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, ஓ.பி.எஸ் தரப்பில் முருகானந்தம் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மேனகா உள்ளிட்ட சில வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளநிலையில் இன்று தனது வேட்புமனுவை ஈவிகேஎஸ் இளங்கோவன் தாக்கல் செய்தார். இதற்கான வேட்புமனுவை சற்றுமுன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்துள்ளார். திமுக கூட்டணியில் கை சின்னத்தில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.