• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்..,

ByP.Thangapandi

Jun 23, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பொது மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதி பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்தரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மதுரை- தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் காலை நேரம் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

இதனால் மதுரை- தேனி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.