• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ரயில்வே கேட் அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை..,

ByP.Thangapandi

May 6, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் மதுரை-போடி செல்லும் அகல ரயில்வே பாதை அமைந்துள்ளது.

இந்த ரயில்வே பாதை வழியாக நாட்டமங்கலம் நுழைவு வாயிலிருந்து சங்கம்பட்டி, ஜோதிமாணிக்கம், கருகப்பிளை, கொடிக்குளம், பிறவியம்பட்டி,வடுகபட்டி என சோழவந்தான் வரை 50 க்கும் மேற்பட்ட கிராம கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பாதையாக உள்ளது. மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் உள்ளன.

இந்நிலையில் கோவிலாங்குளம், காந்திநகர், சக்கிலியங்குளம் ரயில்வே பாலங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட முடியாமலும் இருசக்கரம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள், விவசாய இடு பொருட்களைக் கொண்டு செல்வதற்கு சென்றுவர முடியாத சூழலில் இந்த சாலை பிரதான சாலையாக கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறனர்.

இந்நிலையில் ரயில்வே துறையினர் ரயில்வே பாதையில் தடுப்புகள் அமைத்து சாலையை அடைப்பதற்கு ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கம்பட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த மதுரை கோட்ட மத்திய மூத்த உதவி கோட்ட பொறியாளர் வெள்ளத்துரை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.