• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் – தேளூர் ஊராட்சியில் பரபரப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தேளூர் ஊராட்சியில் பல ஆண்டுகளாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.


தற்போது பெய்து வரும் கனமழையால் மின் அடிக்கடி துண்டிக்கப்படுவதாகவும், கிராமத்தில் குடிநீர் கிடைக்காததால் விலைக்கு வாங்கி குடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், காலி குடங்களுடன் பேருந்த மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழங்குளம் கவுன்சிலர் லூர்துமேரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் சரிசெய்வதாக கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.