இளையான்குடி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட மேலதுறையூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று, இந்த ஊராட்சிக்கு முதல்வர் கடந்த நான்கு ஆண்டுகளில் 4 கோடி வரை பணிகளுக்காக நிதி ஒதுக்கி தந்துள்ளார் என தமிழர் சீ. ரவிக்குமார் எம்எல்ஏ பேசினார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட மேலதுறையூரில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழர் சீ. ரவிக்குமார் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுபம் மதியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், முத்துக்குமார் ஆகியோர். முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றும் போது “மக்களுக்கும், நிர்வாகத்திற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கூட்டங்கள் நடைபெற்ற வருகிறது. அதிலும் நமது முதல்வர் இதனால்ஆண்டுக்கு ஆறு முறை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த ஊராட்சியில் 2022 முதல் துவங்கி இந்த ஆண்டு வரை 6 கோடி வரை நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த ஊராட்சியில் தார் சாலைகள் குடிநீர் செய்திகள் அனைத்தும் செயல்படுத்திட முதல்வர் அதிக நிதியை ஒதுக்கி உள்ளார். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இதுபோன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றுள்ளனவா. நமது தமிழகம் இன்று கல்வித்துறையில் அதிக முன்னேற்றக் கண்டுள்ளது. மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு தொழில்நுட்பக் கல்லூரி ஒதுக்கி முதல்வர் ஆணையிட்டுள்ளார் என உரையாற்றினார். இந்த கூட்டத்தில் 12க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. கிராம சபை கூட்டத்தில் கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் சுப தமிழரசன் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொன்னியந்தல் கிராமத்தில் 44.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
