திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் சக்திவேல்(44). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இடையகோட்டை காவல் நிலைய போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சக்திவேலுக்கு 3 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.











; ?>)
; ?>)
; ?>)