• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது – லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

ByKalamegam Viswanathan

Dec 28, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரம்யா., இவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துபேயத்தேவர் என்பவருக்கு சொந்தமாக கே.போத்தம்பட்டியில் உள்ள இடத்தை தனது மகன் காசிமாயன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.9 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து முத்துபேயத்தேவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில், இன்று லஞ்ச ஒழிப்பு போலிசாரின் வழிகாட்டுதலின் படி, ரசாயணம் தடவிய ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை கிராம நிர்வாக அலுவலர் ரம்யாவிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் ரம்யாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.