• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா

ByA.Tamilselvan

Oct 28, 2022

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. .
இந்த படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு’லெக்ஸஸ்’ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.
இந்த படத்தின் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்த தீபாவளிக்கு விக்ரம் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராஜ் கமல் நிறுவனம் விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றி விழா குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் வெகுவிமர்சையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
பெரிய எதிர்பார்ப்புடன் முக்கிய நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களிடையே பேராதரவை பெற்றது.அதன்படி விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நவம்பர் 7-ம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
அரம்பத்தில் இருந்தே விக்ரம் திரைப்படத்திற்கு பல்வேறு விழா வைத்து கொண்டாடி வந்த நிலையில் தற்போது 100-வது நாள் வெற்றி விழாவை கொண்டாட இருக்கின்றனர்.