சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வி. கோவில்பட்டி மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது. குண்டலபட்டி ரிஷிகேசவன் , சோழவந்தான் பாலமுருகன் ஆகியோர் நான்கு கால யாக பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து, புனித நீர் குடங்களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம்
வந்தனர்.
காலை 10 29 மணி அளவில் விமான கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. கோவில்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும்.
