• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விக்ரம் பிரபு-வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு

Byதன பாலன்

Jan 19, 2023

நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்தும், வெளியிட்டும் வருகிறது SP சினிமாஸ் நிறுவம் தனது அடுத்தப் படமாக ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தை
SP சினிமாஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இந்தப் படத்தைத் தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் அறிமுக இயக்குநரான கார்த்திக் அத்வைத்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார், மேலும் இந்தப் படத்தில் ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கன்னட திரைத்துறையின் மிகவும் பிரபலமான நடிகரான டாலி தனஞ்சயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவரது அதிரடி காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன.பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர் மஹதி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அவர் ஏற்கனவே தெலுங்கில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ புகழ் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சி.எஸ்.பிரேம் குமார் படத் தொகுப்பை கவனிக்கிறார்.
இயக்குநர் கார்த்திக் அத்வைத் இந்தப் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
கார்த்திக்இந்தப் படத்தை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.SP சினிமாஸ் நிறுவனம் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் ‘டீசல்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.