• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஒரே நாளில் ரிலீசாகும் ‘விக்ரம்’ இசை, ட்ரைலர்!

லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ என சூப்பர் ஹிட் மூன்று படங்களை தொடர்ந்து, கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ‘பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் முக்கியமான படங்களில் ஒன்றான ‘விக்ரம்’ உலகம் முழுக்க வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வரும் மே 15 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.