• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

விக்ரம் 1986 -விக்ரம் 2022

ByA.Tamilselvan

May 17, 2022

ஜூன் 3 கமல் நடித்த விக்ரம் படம் வெளியாகவுள்ளது. படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. எதிர்பார்ப்புக்கு பல காரணங்கள் உள்ளன.கமல் நடித்து மிக நீண்டநாட்களுக்கு பிறகு வெளியாகவுள்ள படம்என்பதால் அவரது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. மேலும் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஸ்கனகராஜ் படம் என்பது மற்றொரு காரணம்.இதேபோல சூர்யா,விஜய்சேதுபதி,மலையாள நடிகர்பகத்பாசில் என பலபிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.அனிரூத் இசையில் கமல் எழுதி பாடியுள்ள பாடலான “பத்தலபத்தல பாட்ல் “வைரல் ஆகியுள்ளது.மேலும் வழக்கம்போல கமல் படத்திற்கு வரும் பிரச்சனைகள் வழக்குகள் வந்து படத்தைமேலும் பிரபரலமாக்கியுள்ளது.
விக்ரம் 2022 பார்பதற்கு முன்னாள் விக்ரம் 1986 படத்தை பற்றி பார்க்கலாமா.36 வருடங்களுக்கு முன் 1986 ல் கமல் நடித்த வெளிவந்த படம் . . தமிழ் திரைப்பட உலகில் 1 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான முதல் திரைப்படம் விக்ரமாகத் தான் இருந்தது இத்திரைப்படத்தினை இயக்கியவர் ராஜசேகர் ஆவார். இப்படத்தில் பல புதிய தொழில்நுட்ப விசயங்களை புகுத்தியிருப்பார்கமல்.இன்றைக்கு கணிணி சர்வசாதரனமாக உபயோகத்தில் வந்துவிட்டது.முதல் முதலில் கணிணி தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற திரைப்படம் இதுதான்.இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். குமுதம் வார இதழில் மறைந்த எழுத்தாளர் சுஜாதாதொடர்கதையாக வந்து அதன் பின்னர் படமாக்கப்பட்டது.
இத்திரைப்படத்தை இயக்குவதற்கு மணிரத்னத்தையே தன் முதல் தேர்வாக வைத்திருந்ததாக பல தருணங்களில் சொல்லியிருக்கிறார்.
. இளையராஜ இசையில் 5 பாடல்கள் இடம் பெற்ற படம் இது.கமல் பாடிய விக்ரம்.. விக்ரம் வனிதாமணி … சிப்பிக்குல் ஒரு முத்து ,என் ஜோடி மஞ்சகுருவி மீண்டும் மீண்டும் வா … என எஸ்.பி,பி,யோசுதாஸ் ,ஜானகி,சைலஜா போன்ற பாடகர்களால் மீண்டும் மீண்டும் கேட்கவைக்கும் பாடல்கள் இவை.
நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற வணிகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம் என்றே இப்படம் பற்றி கமல் கூறியுள்ளார்.விக்ரம் 1986 படம் வெற்றிபெற்றதைபோலவே விக்ரம் 2022 படமும் வெற்றிபடமாக கமலுக்கு அமையும்.