திராவிட முன்னேற்றக் கழகம் காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி அமைச்சருமான தா மோ அன்பரசன் தலைமையில் சென்னை ஆலந்தூரில் இப்தார் மற்றும் இஸ்லாமியர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவஹிரூல்லாஹ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்
திராவிட முன்னேற்ற கழக அரசு சென்னையிலே விமான நிலையம் அருகில் ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ரமலான் மாதம் தொடக்கத்திலேயே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

ரமலானின் புனிதமான கடைசி நாட்களிலே சட்டமன்றத்திலேயே
வக்பு சொத்துக்களை பறிக்கக்கூடிய ஒரு கெட்ட நோக்கத்துடன் ஒன்றிய அரசை கொண்டு வந்திருக்கக்கூடிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் வக்பு திருத்தா சட்ட 2024 ஐ திரும்பப் பெற வேண்டும். என்ற ஒரு சிறப்பு தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதெல்லாம் முக்கியமான ஒரு சிறப்பு பணியாக இருக்கின்றது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு முஸ்லிம் சமுதாயம் நன்றி கடன் பட்டுள்ளது.
ரமலான் மாதத்திலே த வே க வின் பொதுக்குழுவிலே அவருடைய கட்சியைச் சார்ந்த ஒரு முஸ்லிம் உறுப்பினர் நடிகர் விஜயுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிடுகின்ற நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளை புரியாத ஒரு கட்சி விஜய் உடைய கட்சி
குறிப்பாக அந்த கட்சியின் ஆதவ் அர்ஜுனா உண்மைக்கே புரம்பான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.
உண்மையில் என்ன நிலவரம் என்றால் நீண்ட நாட்களாக நாங்கள் வைத்த கோரிக்கையான முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு 20 கைதிகள் முழுமையாக விடுதலை பெற்று
உள்ளார்கள் எஞ்சி அவர்கள் நீண்ட நாள் பிணையது விடுவிக்கப்பட்டு
உள்ளார்கள்
அவர்களுடைய முன் விடுதலைக்கான உத்தரவும் விரைவில் வர உள்ளது
உண்மையை திரித்து பொய்யை பரப்பக்கூடிய பணியை செய்வது அவருடைய நிலைக்கு சிறப்பு செய்யக்கூடியதாக உள்ளது. பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கக்கூடிய ஒரு கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வலுவான காங்கிரஸ் இடதுசாரி கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் மறுமலர்ச்சி திராவிட கழகம் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கொண்ட ஒரு பலமான கட்டமைப்பை இங்கு உருவாக்கி செயல்பட்டு வருவதின் காரணமாகத்தான்
ஒன்றிய அரசுடன் ஆட்சியில் இருந்த ஒரு சூழலில் பல ஆசை வார்த்தைகளை சொன்ன பொழுதும் கூட பாஜகவினால் தான் விரும்பக்கூடிய வளர்ச்சியை தமிழகத்தில் காண முடியவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை திமுகவிற்கு தேர்தல் வேலை பார்க்கக்கூடிய வேலையில் ஆதவ் அர்ஜுன அவர்களுக்கு இது தெரியவில்லையா என கேள்வி கேட்டு விட்டு சென்றார்.