• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

துணிவு பற்றி விஜய் அசத்தல் பேச்சு

ByA.Tamilselvan

Dec 7, 2022

பொங்கலுக்கு துணிவு படம் போட்டியாக ரிலீஸ் ஆவது குறித்து கேட்டபோது தன்னிடம் நடிகர் விஜய் சொன்ன விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் ஷாம்.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, பிக் பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் வாரிசு படத்தில் நடித்துள்ளனர்.வரும் பொங்கல் 2023க்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் மோத உள்ள நிலையில், அதுதொடர்பான நடிகர் விஜய்யின் பார்வை எப்படி உள்ளது என தனது லேட்டஸ்ட் பேட்டியில் கூறியுள்ளார் நடிகர் ஷாம்.
இயற்கை, லேசா லேசா, 12 பி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் ஷாம் வாரிசு படத்தில் விஜய்யின் சகோதரராக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில், பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு நடிகர் ஷாம் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன
அஜித்தின் துணிவு படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு வந்ததுமே விஜய் அண்ணனுக்கு போன் பண்ணிட்டேன்.. அண்ணா துணிவு படமும் பொங்கலுக்கு வருதுன்னா என சொன்னதுமே.. கொஞ்சம் யோசிக்காமல்.. நல்ல விஷயம் தானே டா.. அவரும் நம்ம நண்பர் தான.. ரெண்டு படமும் வரட்டும்.. ரெண்டு படமும் நல்லா ஓடும்.. ரசிகர்கள் இந்த பொங்கலை நல்லா கொண்டாடுவாங்களன்னு சொன்னார் என தனது பேட்டியில் நடிகர் விஜய் துணிவு படத்தின் மோதல் குறித்து பேசியதை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.