• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் 58 வது ஜயந்தி மகோத்சவம்..,

ByKalamegam Viswanathan

Mar 14, 2026

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முள்ளி பள்ளம் கிளையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அவர்களின் 58 வது ஜயந்தி மகோத்சவம் இன்று காலை 8 மணிக்கு புண்ணியாக வாசனம் ,கோ பூஜை ,குரு வந்தனம், கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், ஆவஹந்தி ஹோமம்,ஆயுஷ் ல்ய ஹோமம், மிருத்யஞ்சய ஹோமம் செய்யப்பட்டு மகாபூர்ணாகுதி நடைபெற்றது.

தீபாராதனை கூட்டு வழிபாடு முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஸ்ரீ காஞ்சி பெரியவர்கள் வேதம் வித்தை வைத்தியம் என்ற கூற்றுப்படி தினமும் மாலையில் மாணவ மாணவியருக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு இலவச கல்வி ஆன்மீக கல்வி போதிக்கப்படுகிறது. கோசாலையில் நாட்டு பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது .

ஏற்பாடுகளை நிர்வாகி கே ஸ்ரீகுமார், வெங்கட்ராமன் வீர மணிகண்டன் முத்துப்பாண்டி நடராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்
தொடர்புக்கு பொறியாளர் கே. ஸ்ரீகுமார் 94431 51258 தொடர்பு கொள்ளலாம்