• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆறுதல் கூறிய தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர்

சிலிண்டர் வெடிப்பில் உயிர் இழந்த பத்மநாபன் குடும்பத்திற்கு தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெருவில் நேற்று காலை எரிவாயு சிலிண்டர் வெடித்து 5 பேர் இறந்துவிட்டனர், 13 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் சிலிண்டர் வெடிப்பு குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த தீயணைப்புத் துறை வீரர் பத்மநாபன் உருவப்படத்திற்கு தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் மேலும் பத்மநாபன் மகன் லோகேஷ் மகள் ஜீவிதா மற்றும் அவருடைய தாயாருக்கு ஆறுதல் கூறிவிட்டு விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.

மேலும் விபத்து நடந்த இரண்டாம் நாளான இன்று இந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பார்வையிட்டு வருகின்றனர். வருகின்ற மக்கள் பத்மநாபன் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு சோகத்துடன் திரும்பி செல்கின்றனர்.