• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட கோரிக்கை..!

Byவிஷா

Dec 29, 2023

சென்னை தியாகராய நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு, மறைந்த கேப்டன் நடிகர் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என நடிகர் ராம்கி கோரிக்கை வைத்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் ராம்கி, லிவிங்ஸ்டன் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராம்கி..,
“சென்னை தியாகராய நகரில் நடிகர் சங்கத்துக்கு தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நடிகர் சங்கத்தின் நீண்ட நாள் கடனை அடைப்பதற்கு நன்றி கடனாக விஜயகாந்த் பெயரை நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கு சூட்ட நடிகர் ராம்கி கோரிக்கை” வைத்துள்ளார்.