• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

விஜயகாந்த் நலம்வேண்டி திருப்பரங்குன்றம் முருகனுக்கு பால் அபிஷேகம்..,நிர்வாகிகள் மனம்உருகி வழிபாடு…

ByM.Bala murugan

Dec 1, 2023

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சரி இல்லாததால் மருத்துவமனையில் தொடர்ந்து 15 நாட்கள் சிகிச்சை பெற்று வருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் உடல் நலம் பெற மனம்உருகி வேண்டி வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அறுபடைகளின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மதுரை அவனியா புரம் பகுதி கழக செயலாளர் செந்தில் ஏற்ப்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் கணபதி தலைமையில் தேமுதிக சார்பாக கருவறையில் உள்ள மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து 50க்கும் மேற்பட்ட தேமுதிக கட்சி நிர்வாகிகள் தங்கத்தேர் வடம் பிடித்து இழுத்து கேப்டன் விஜயகாந்த் பூரண குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொண்டனர்,பின்னர் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கழக விசாரணை குழு உறுப்பினர் அழகர்சாமி அவர்கள் மாவட்டத் துணைச் செயலாளர் தெய்வம் கணபதி சரவணன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் சேதுராமன் குருமூர்த்தி பசுமலை பொதுச் செயலாளர் மணிவண்ணன் திருப்பரங்குன்றம் ஒன்றிய கதிரேசன் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் திருமங்கலம் நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் கருணாநிதி மாவட்ட கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் மணிகண்டன் தர்மராஜ் செல்வம் நாகராஜ் கவுண்சிலர் ராஜகுரு ராமமூர்த்தி மகளிர் அணி மகேஸ்வரி அவனியாபுரம் பகுதி கழக நிர்வாகிகள் சாலூர் கண்ணன் அய்யனார் தன்ராஜ் சாந்தகுமார் சந்திரன் தவமணி வட்டக் கழகச் செயலாளர்கள் வெற்றிவேலன் சுரேஷ் குமார் அன்புச் செழியன் பரமசிவம் அவனியாபுரம் நிர்வாகிகள் பாலா சமயன் கார்த்தி மகாமணி மூலப்பொருள் பாண்டி முத்து கருப்பு மாரிமுத்து பொன்னுத்துரை சிந்தாமணி நிர்வாகிகள் சுதாகர் புதுக்கோட்டை மணி தனசேகர் மணிவேல் மற்றும் பசுமலை பகுதி கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.