• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஏஐ தொழில்நுட்பத்தில் விஜய்யுடன் நடிக்கும் விஜயகாந்த்

Byவிஷா

Apr 17, 2024

நடிகர் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சமீபத்தில் இதன் புதிய போஸ்டர் வெளியானது. அதில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்.5ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரையில் கொண்டு வருவதற்காக பிரேமலதாவிடம் அனுமதி கேட்டுள்ளாராம் இயக்குநர் வெங்கட்பிரபு. இதற்கு அவர் சம்மதமும் தெரிவித்துவிட்டாராம்.
மேலும், “கேப்டன் உயிரோடு இருந்திருந்தால் தனது தம்பி விஜய்க்காக மறுக்காமல் படத்தில் நடித்துக் கொடுத்திருப்பார்” எனச் சொல்லி பிரேமலதா நெகிழ்ந்துள்ளாராம். தேர்தல் முடிந்த பிறகு நடிகர் விஜயும் இது தொடர்பாக பிரேமலதாவை நேரில் சந்திக்க இருக்கிறாராம். விஜய் ஹீரோவாக மக்கள் மத்தியில் புகழ்பெறப் போராடிய சமயத்தில் அவருடைய ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து கைகொடுத்தது விஜயகாந்த் தான். இப்போது அவர் மறைந்தும் விஜய் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் வருகிறார். இதை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.