புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளத்துப்பட்டி ஊராட்சி மெய்வழிச்சாலையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 குடும்பங்களின் வீடுகள் தீயில் இருந்து நாசமாயின. இந்த சம்பவத்தை அறிந்த முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவியை ஆறுதலையும் தெரிவித்தார்.

அப்போது அதிக பாதிப்பு உள்ள குடும்பங்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், மற்ற பாதிப்படைந்த குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும், தீ விபத்தால் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து ஐயாயிரம் ரூபாயுயும், மளிகை காய்கறி,வேட்டி, சேலை, அரிசி (5kg) காய்கறி தொகுப்பு (8kg) உள்ள அத்தியாசிய பொருட்கள் 5000 மதிப்புள்ள தொகுப்பினையும் பொது மக்களுக்கு வழங்கினார்.

மேலும் அந்த பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டு லேப்டாப் புத்தகம் நோட்டு உள்ளிட்டவரை இழந்த கல்லூரி இளைஞர்களையும், பள்ளி குழந்தைகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன், அன்னவாசல் பேரூராட்சி மன்ற தலைவர் சாலை மதுரம், இளைஞர் அணிச்செயலாளர் VTR.காந்தி, பாசறை செயலாளர் பாலசுப்பிரமணியன், சாலை ஜெயவேல், சாலை வித்தகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.