கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜய பாஸ்கர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். அக்கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்களுடன் வந்து மனு அளித்து விட்டுச் சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
திமுக ஐ.டி விங்க் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் மற்றும் என்னுடைய பெயரை பயன்படுத்தி தவறாக தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது சம்மந்தமாகவும், எங்களது ஐ.டி விங்க் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக ஐ.டி விங்க் நிர்வாகி மீது நடவடிக்கைகள் எடுக்கக் கோரி, அதே போல் 2 மாதத்திற்கு முன்பு மணல் கடத்தலில் ஈடுபடுவதாக பொய் செய்தியை உருவாக்கி முகநூலில் பதிவிட்டு, எனது பெயருக்கு களங்கம் விளைவித்த ஐ.டி விங்க் நிர்வாகிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என புகார் கொடுத்து இருக்கிறோம். எங்கள் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு தேர்தல் நேரத்தில் அவர்களது பணிகளை முடக்குவது போல் காவல் துறை நடவடிக்கைகள் திருத்திக் கொள்ள வேண்டும் என மனு கொடுத்து இருப்பதாக தெரிவித்தார்.