• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த்..,

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின்.ரூ.10_ லட்சம் உதவியில் மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

கன்னியாகுமரியில் ரூ10 லட்சத்தில் மீனவர் ஒய்வு அறை விஜய்வசந்த் எம். பி அடிக்கல் நாட்டினார்.

கன்னியாகுமரி சகாய நகர் பகுதியில் உள்ள வாடி தெருவில் மீனவ மக்கள் வலை பின்னும் மீனவர் ஒய்வு கூடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்திடம் கோரிக்கை வைத்தனர்
மீனவர்களின் கோரிக்கையினை ஏற்று மீனவர் ஓய்வு கூடம் கட்டுவதற்கு பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10. லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து இன்று (21-02-2026) அடிக்கல் நாட்டினார் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த். கன்னியாகுமரி பங்குதந்தை அருட்பணி உபால்டு அர்ச்சிப்பு செய்தார்.

நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், மாநில மீனவர் அணி பொதுசெயலாளர் ஜவகர், மீனவர் காங்கிரஸ் மாநில செயலாளர் பாஸ்டின், நகராட்சி துணைத் தலைவர் கவுன்சிலர் ஜனஸ்மைக்கேல், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாமஸ்,
மாவட்ட துணைத் தலைவர் மணக்குடி லாரன்ஸ் மாநில விளையாட்டுத் துறை கிழக்கு மாவட்ட தலைவர் அருண், மீனவரணி நிர்வாகிகள் ஜேம்ஸ் வர்மா, நெப்போலியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணி
உபால்ட் பிரார்த்தனை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.