கரூரில், தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்.
கரூர் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையிலான தனிபடைகள், விசாரனை குழு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரனை மேற்கொள்ள உள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பான கோப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உள்ளனர்.
கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்து நகர காவல் ஆய்வாளர் தலைமையில் கோப்புகளை சென்னைக்கு எடுத்துச் செல்ல உள்ளனர்.

கரூர் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த், விசாரணை கோப்புகளை எடுத்துக்கொண்டு காவல் வாகனம் அல்லாமல், காவல் ஆய்வாளரின் தனியார் கிரிஸ்டா காரில் கோப்புகளை எடுத்துக்கொண்டு சென்னை கிளம்பிவிட்டனர்.