• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் கொண்டாட்டம்..!

Byவிஷா

Oct 18, 2023

கோவையில் விஜய் ரசிகர்கள் ‘வேட்டைக்கும் ரெடி, கோட்டைக்கும் ரெடி’ என போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படம் குறித்த அப்டேட் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்சைகளைச் சந்தித்து வருகிறது. முன்னதாக “நா ரெடிதான் வரவா” பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது தொடர்பான காட்சிகள், டிரெய்லரில் விஜய் ஆபாச வசனம் பேசியது போன்ற பல்வேறு சர்சைகளைச் சந்தித்து உள்ளது.
பல சர்ச்சைகள் மத்தியில் லியோ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.அந்த வகையில், பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியும், சில மாவட்டங்களில் கட் அவுட்டுகள் வைத்தும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் லியோ வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி” என, 234 என்று தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதே போன்று, 86வது வார்டு புல்லுக்காடு பகுதி விஜய் ரசிகர்கள் சார்பில் தமிழும் தளபதியும் எங்கள் அடையாளம். ஓராயிரம் ஓநாய்களின் ஓலம் ஒரு சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடாகாது என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.