• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிச்சைக்காரன் 2’ அப்டேட் கொடுத்த விஜய்ஆண்டனி..!

Byவிஷா

Feb 2, 2023

மலேசியாவில் படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் விஜய் ஆண்டனிக்கு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது, ”அன்பு இதயங்களே நான் 90சதவீதம் குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி” என்று டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.