• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தலைவராக திருநகரை சேர்ந்த வித்யாபதி தேர்வு..,

ByKalamegam Viswanathan

Jun 10, 2025

மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்காக செல்வப் பெருந்தகை அணி சார்பில் உசிலம்பட்டியை சேர்ந்தசீதா என்ற பெண் வேட்பாளரும்
மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவரும் திருநகர் பகுதியைச் சேர்ந்த வித்யாபதி ஆகிய மூன்று பேரும் மும்முனை போட்டியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்நிலையில் இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் விதிமுறைகளை மீறி செல்வப் பெருந்தகை அணி வேட்பாளர் சீதா போட்டியிடுவது என உறுதி செய்யப்பட்டு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கமிட்டிக்கு புகார் அனுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சீதா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதில் மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக வித்யாபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சௌந்தரபாண்டியனை விட 1261 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தேர்வு செய்யப்பட்ட வித்யாபதி முன்னாள் சுதந்திரப் போராட்ட தியாகியும் நெல்லை நகர் மன்ற தலைவருமான ப. ராமசாமி மகள் வழி பேரன் ஆவார். மேலும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.