• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உதயப்பூர் கொலையாளிகள் மீது தாக்குதல் வீடியோ

ByA.Tamilselvan

Jul 3, 2022

உதய்ப்பூர் கொலையாளிகள் மீது நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியானது.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வந்வர் தையல்காரர் கன்ஹையா லால் (வயது 40). இவரது மகன்களில் ஒருவரான 8 வயது மகன், சமூக வலைத்தளங்களில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக லாலுக்கு கொலை மிரட்டல் வந்து, அவர் போலீசில் புகார் செய்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இரண்டு பேர் கூர்மையான கத்திகளுடன் கன்ஹையா லால் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினர். அவர்கள் தாங்கள் எடுத்து வந்த கத்திகளால் அவரது கழுத்தை அறுத்து தலையை துண்டித்தனர். இதில் கன்னையா லால் உயிரிழந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி விட்டனர்.
இந்நிலையில், தையல்காரர் கன்ஹையா லாலை கொலை செய்தவர்கள் என்று முகமது ரியாஸ் மற்றும் கவுஸ் முகமது ஆகிய இருவரை போலீசார் கைது, சிறையில் அடைத்துள்ளனர். முன்னதாக அவர்களை சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்றபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே இந்த கொலையாளிகள் பாகிஸ்தான் தொடர்புஎன்றும்,சில ஊடகங்களில் ஆர்எஸ்எஸ் தொடர்பு தொடர்பு உள்ளவர்கள் என்றும் தகவல்கள் வருகின்றன