விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவப்படை அப்பாவி பொதுமக்களை தாக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை தாக்கி வெற்றி பெற்றதை அடுத்து வெற்றி பேரணி நடைபெற்றது.

இந்த வெற்றி பேரணி இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தென்காசி சாலை அம்பலப்புலி பஜார் வழியாக மீண்டும் ஜவகர்மைதானம் வந்தடைந்தது. இந்த பேரணியில் கட்சி பாகுபாடு இன்றி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஆண் பெண் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.
பேரணி ஏற்பாடுகளை மூத்தோர் நல சங்க தலைவர் பெத்துராஜா செயலாளர் தேவராஜா பொருளாளர் முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது. கலந்து கொண்டவர்கள் பாரத்மாதாக்கு ஜே என கோசங்கள் எழுப்பி சென்றனர்.