• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

போயஸ் கார்டனுக்கு குடியேற பறந்து செல்லும் காதல் கிளிகள் விக்கி-நயன்

Byகாயத்ரி

Nov 27, 2021

நடிகை நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் உள்ள அபார்ட்மென்ட்டில் 2 வீடுகளை வாங்கியுள்ளார்.


தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் எழும்பூரில் வசித்து வருகிறார். நயன்தாரா தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதால் திருமண தேதியை முடிவு செய்யவில்லை. கமிட்டான படங்களை முடித்த பிறகு திருமணம் குறித்து முடிவு எடுக்க உள்ளார்.


நயன்தாரா திருமணத்திற்கு பிறகு அமைதியான இடத்தில் வசிக்க விரும்புகிறார். இந்நிலையில் தான் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் அபார்ட்மென்ட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அவருக்கு அந்த அபார்ட்மென்ட் மிகவும் பிடித்துவிட்டதாம்.அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நயன்தாரா இரண்டு அபார்ட்மென்ட்டுகளை வாங்கியிருக்கிறார்.

அது 4 படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மென்ட்டுகள். கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நயன்தாராவுக்கு போயஸ் கார்டனில் காஸ்ட்லி அபார்ட்மென்ட் வாங்குவது சாதாரணம் தான்.நயன்தாராவின் நண்பரான தனுஷும் போயஸ் கார்டனில் குடியேறவிருக்கிறார். அவர் தன் மாமனார் ரஜினிகாந்தின் பங்களா அருகே பிரமாண்டமான வீடு கட்டி வருகிறார்.