

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை நேற்று இரவு திடீரென சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ரயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர் துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாளம் செந்தில், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி நிஷா கௌதம ராஜா முத்துச்செல்வி சதீஷ் செல்வராணி ஜெயராமச்சந்திரன், அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் பி ஆர் சி ராஜா சங்கங்கோட்டை சந்திரன், சரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்..