• Thu. May 2nd, 2024

ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துகளை மீட்டு கொடுங்க.., மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி..!

Byகுமார்

Jun 17, 2023

மதுரையில் முந்தைய ஆதீனத்தை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து உள்ளனர். இந்த சொத்தை மீட்டது போலவே சிவகங்கையில் உள்ள 1900 ஏக்கர் நிலத்தையும் மீட்டு, அங்கு விவசாய பல்கலை கழகம்அமைக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் மதுரை ஆதீனம் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.
மதுரையில் தெற்கு ஆவனி மூலவீதியில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட ஆதீனம் மடத்தில் ஒரு பகுதியில் தனியார் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த இடத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மதுரை ஆதீனம் இன்று மீட்டு கொண்டுவரப்பட்டது அப்பொழுது செய்தியாளர் சந்திப்பில் மதுரை ஆதீனம் 293 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் ஸ்ரீஞானசம்பந்ததேசிகபரம்மச்சாரிய சுவாமிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியது
மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமராக வரலாம். அவருடைய தமிழ் உணர்வு அதற்கு பயன்படும். அவர் பிரதமராக வர வேண்டும் முந்தைய ஆதீனத்தை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து உள்ளனர். இந்த சொத்தை மீட்டது போலவே சிவகங்கையில் உள்ள 1900 ஏக்கர் நிலத்தையும் மீட்டு, அங்கு விவசாய பல்கலை அமைக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவர் பிரதமராக வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அவர் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்ததை பாராட்ட வேண்டும் எனும் நோக்கில் தான் செங்கோல் கொடுத்தேன். தமிழர் தான் பிரதமராக வர வேண்டும். தமிழ்நாட்டையும் தமிழரே ஆள வேண்டும். அது போல இந்தியாவையும் தமிழர்கள் தாராளமாக ஆளலாம். தமிழ்நாட்டிலிருந்து யாரை வேட்பாளராக அறிவித்தாலும் ஆதரிப்போம்.
நான் எந்த அரசியல் கட்சியின் பிரச்சாரத்திற்கும் போக மாட்டேன். யார் வந்தாலும் வாழ்த்து சொல்வேன். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ரசிகர்கள் என்னை பகைப்பார்கள். பிரதமர் மோடி திருக்குறள் தேவராத்தை விரும்பி கேட்பவர். உலகம் முழுவதும் திருக்குறளின் பெருமையை சொல்கிறார். மோடி தமிழர்களுக்கு விரோதமானவர் அல்ல. எய்ம்ஸ் மருத்துவமனையை நிச்சயம் கொண்டு வருவார்கள்.
ஆதீன மடாதிபதியாக இருப்பது முள் மேல் இருப்பது போலிருக்கிறது. ஏன் வந்தோம் என தோன்றுகிறது. எனக்கு பிடிக்கவில்லை. சிறு வயதில் இருந்தே பல்வேறு மடங்களிலும் ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறேன் என மதுரை ஆதீனம் பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *