வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 228வது நினைவிடத்தில், குருபூஜையை வாரிசு தாரரான சிவகங்கை ராணி மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் விடுதலை போராட்ட வீரர் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரண்மனைவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் மற்றும் ராமநாதபுரம் இளைய மன்னர் ஆதித்ய சேதுபதி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ஸ்டீபன். திமுக சார்பில் நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த், பாஜக நகரத் தலைவர் உதயா, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகி துரைகருணாநிதி, அமமுக மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் அசோகன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவநர் திருமாறன், தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் முத்துபாரதி, ஜோசப்தங்கராஜ், மதிமுக மாவட்டச் செயலாளர் பசுபொன் மனோகரன் , குழந்தை ராணி நாச்சியார் மற்றும் பல்வேறு அமைப்பினர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.